தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இயற்பியலுக்கான நோபல் பரிசு; பெல்ஜியம் விஞ்ஞானி தேர்வு

இயற்பியலுக்கான நோபல் பரிசு; பெல்ஜியம் விஞ்ஞானி தேர்வு

இயற்பியலுக்கான நோபல் பரிசு; பெல்ஜியம் விஞ்ஞானி தேர்வு


UPDATED : அக் 07, 2026 10:45 AM

ADDED : அக் 07, 2026 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 10:45 AM ADDED : அக் 07, 2026 10:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டாக்ஹோம்:
உயர் ஆற்றல் 'நியூட்ரினோ' துகள்களைக் கண்டறியும் ஆய்வகத்தை உருவாக்கியதற்காக, பெல்ஜியத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சன், 82, இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல் உட்பட ஆறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில், பெரும் கவுரவமாக கருதப்படும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயரை அறிவிக்கும் நிகழ்ச்சி தற்போது துவங்கி உள்ளது.

அதன்படி முதலில், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தின் பிரபல இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் இருந்து வரும் மிகச்சிறிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களை கண்டறிந்ததற்காகவும், இந்த ஆராய்ச்சிக்காக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைக்குள் மிகப்பெரிய 'ஐஸ்கியூப் நியூட்ரினோ'ஆய்வகத்தை அமைத்ததற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

சாதாரண தொலைநோக்கியால் பார்க்க முடியாத விண்வெளியின் மிக ரகசியமான மற்றும் இருண்ட பகுதிகளைக் கண்காணிக்க பெரிதும் உதவும் இந்த நியூட்ரினோ துகள்களால் பிரபஞ்ச ரகசியத்தை அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இயற்பியலைத் தொடர்ந்து, வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us