UPDATED : ஆக 03, 2024 12:00 AM
ADDED : ஆக 03, 2024 10:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) உதயகுமார், பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கீதா, மே, 31ம் தேதி ஓய்வு பெற்றார். பொறுப்பு சி.இ.ஓ., வாக மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் மருத்துவ விடுப்பில் சென்றார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கூடுதல் பொறுப்பாக, திருப்பூரையும் கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) உதயகுமார், பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நமது நிருபர் -