சரவணம்பட்டி அரசு பள்ளியில் தினமலர் பட்டம் இதழ் விழா
சரவணம்பட்டி அரசு பள்ளியில் தினமலர் பட்டம் இதழ் விழா
UPDATED : ஆக 03, 2024 12:00 AM
ADDED : ஆக 03, 2024 10:18 AM
கோவை:
சரவணம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது.
கோவை சரவணம்பட்டியில் மான்செஸ்டர் டிரஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில், தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் வழங்கும் விழா, அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது.
மாணவர்களுக்கு தினமும் செய்தி தாள் வாசிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். பொது நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும். உலகச் செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், அறிவுசார் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள தினமலர் நாளிதழ் வழங்கும் பட்டம் இதழ் உதவுகிறது.
சரவணம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள், வாகராயம்பாளையம், பொன்னேகவுண்டன் புதுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு மான்செஸ்டர் டிரஸ்ட் ரோட்டரி கிளப் பட்டம் இதழை வழங்குகிறது.
சரவணம்பட்டியில் நடந்த துவக்க விழாவில், அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி வரவேற்றார். மான்செஸ்டர் டிரஸ்ட் ரோட்டரி கிளப் தலைவர் ரகுராமன், பட்டம் இதழ்களை ஆசிரியர்கள், மாணவர்கள், தலைமை ஆசிரியைக்கு வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்களுக்கு எப்போதும் மனதில் பதியும் வகையில் பட்டம் இதழ்களில் எளிமையாகவும், அறிவுசார்ந்த செய்திகளும், தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
எதிர்கால வாழ்க்கைக்கும், கல்விக்கும் உதவும் வகையில் இவை அமைந்துள்ளன. மாணவர்கள், வாசித்து பயன்பெற வேண்டும், என்றார். துவக்க நிகழ்ச்சியில், கோயம்புத்துார் மான்செஸ்டர் டிரஸ்ட் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், செந்தில்குமார், விவேக், கோமதி, மகேஷ்குமார், துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை லட்சுமி நன்றி தெரிவித்தார்.