புதிய கல்விக்கொள்கை தமிழகத்துக்கு அவசியம்: வரவேற்கும் மக்கள்
புதிய கல்விக்கொள்கை தமிழகத்துக்கு அவசியம்: வரவேற்கும் மக்கள்
UPDATED : பிப் 19, 2025 12:00 AM
ADDED : பிப் 19, 2025 10:04 AM

கோவை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2020ல், மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. மத்திய அரசின், சமக்ர சிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்தக்கு தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க முடியும் என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால், அது தேசிய கல்வி கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும். அதில் இணைவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வரும் சூழலில், நம் கோவை மக்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டோம்.
அதற்கு அவர்கள் அளித்த பதில்:
தேவையில்லை
கலை அஷ்வினி சமூக ஆர்வலர்:புதிய கல்வி கொள்கை என்பது, கல்வியை வியாபாரமாக்கும் முயற்சி. இதன் வழியாக ஹிந்தியை மத்திய அரசு தமிழகத்துக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. கல்வியில் வளர்ச்சி அடைந்த தமிழகத்துக்கு, மும்மொழி தேவையில்லை.
அவசியம்
நவீன்குமார், தனியார் நிறுவன ஊழியர்: ஹிந்தி வேண்டாம் என்பது எல்லாம் பழைய கதை. அதெல்லாம் இனி தமிழ கத்தில் எடுபடாது. மும்மொழி கல்வி திட்டத்தில், பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதை அவசியம் குழந்தைகள் படிக்க வேண்டும்.
இன்னொரு மொழி
மைதிலி யோகராஜ் கிராபிக் டிசைனர்: மத்திய அரசின் மும்மொழி கொள்கை, தமிழகத்துக்கு மிகவும் அவசியம். தமிழ், ஆங்கிலம் அவசியம். அதே நேரத்தில் இன்னொரு மொழியை, குழந்தைகள் கற்றுக்கொள்வது அவசியம்.
வரவேற்பு
ராஜேந்திரன் தன்மானம், ரியல் எஸ்டேட் தொழில்: தமிழ் மட்டும் தெரிந்தவர்கள், ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்படுகின்ற னர். அதனால் நம் குழந்தைகள் கண்டிப்பாக மூன்று மொழிகள் கற்றுக்கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வரவேற்க வேண்டும்.
கஷ்டம்
மகேஷ், மென்பொறியாளர்:ஒரு மொழியை கூடுதலாக படிப்பது நல்லது. குறிப்பாக இந்தி நம் தேசிய மொழி. அதை அவசியம் படிக்க வேண் டும். எனக்கு ஹிந்தி தெரியாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். நம் பிள்ளைகளுக்கு அந்த நிலை வரக்கூடாது.
பாதிக்கும்
துர்கா, சட்டக்கல்லுாரி மாணவி: கல்வியை, அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கி இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை அதை பாதிக்கும் வகையில் உள்ளது.
முயற்சி
பவதாரணி, கல்லுாரி மாணவி: தமிழகத்துக்கு புதிய கல்விக்கொள்கை தேவையில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு வைப்பது அவசியமில்லை. இது, மத்திய அரசு ஹிந்தியை திணிக்கும் முயற்சியாகும்.
நல்லது
பிரசாத், தனியார் நிறுவன அதிகாரி: போட்டி நிறைந்த இந்த உலகத்தில், கூடு தலாக ஒரு மொழியை கற்றுக்கொள்வது நல்லது. புதிய கல்விக்கொள்கையில் உள்ள, நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

