தேர்வு குறித்த விவாதத்தில் சுமார் மூன்றரை கோடி பேர் பதிவு
தேர்வு குறித்த விவாதத்தில் சுமார் மூன்றரை கோடி பேர் பதிவு
UPDATED : ஜன 29, 2025 12:00 AM
ADDED : ஜன 29, 2025 10:29 AM

சென்னை:
தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மாணவர்களிடையே தேர்வு குறித்த விவாதம் நடந்தது. 2025-ம் ஆண்டில் 8-வது பதிப்பில் 3.56 கோடி பதிவுகளைப் பெற்றுள்ளது.
தேர்வு குறித்த விவாதத்தை மக்கள் இயக்கமாக மேலும் வலுப்படுத்த, 2025, ஜனவரி 12 (தேசிய இளைஞர் தினம்) முதல் 2025, ஜனவரி 23 (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்) வரை பள்ளி நிலையில் தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 1.42 கோடி மாணவர்கள், 12.81 லட்சம் ஆசிரியர்கள், 2.94 லட்சம் பள்ளிகள் பங்கேற்றன. கோ-கோ, கபடி போன்ற உள்நாட்டு விளையாட்டுகள், குறுகிய தூர மராத்தான்கள், படைப்பாற்றல் மீம் போட்டிகள், வீதி நாடக நிகழ்ச்சிகள், கண்கவரும் சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகளில் பங்கேற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள 567 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாரத் ஹை ஹம் என்ற தலைப்பிலான விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 55,961 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரதமரால் எழுதப்பட்ட தேர்வு வீரர்கள் புத்தகம் வழங்கப்பட்டது.