இந்திய புள்ளியியல் நிறுவனத்தை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாற்ற நடவடிக்கை
இந்திய புள்ளியியல் நிறுவனத்தை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாற்ற நடவடிக்கை
UPDATED : ஜன 29, 2025 12:00 AM
ADDED : ஜன 29, 2025 10:27 AM

சென்னை:
இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ஐஎஸ்ஐ), புள்ளிவிவர ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ சட்டம் மற்றும் ஐ.எஸ்.ஐ விதிமுறைகளின் அடிப்படையில், 2024-26 காலகட்டத்திற்கான புதிய கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தரச்சான்று சட்டத்தின்படி, இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் 4-வது மறுஆய்வுக் குழு 2020 இல் அமைக்கப்பட்டது. விஞ்ஞானியும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) முன்னாள் தலைமை இயக்குநருமான டாக்டர் மஷேல்கர் தலைமையிலான இந்தக் குழு, மறுகற்பனை, மறுகண்டுபிடிப்பு மற்றும் மறுநிலைப்படுத்தல் என்ற கருப்பொருளின் அடிப்படையில், குழு நிர்வாகம், கல்வித் திட்டங்கள், ஆராய்ச்சி முன்னுரிமைகள், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடும் 61 பரிந்துரைகளை அது முன்மொழிந்தது.
ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடு, சவால்கள் மற்றும் அபிலாஷைகள் குறித்த நுண்ணறிவுகளைச் சேகரிக்க ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தப்பட்டது. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியமைக்கவும், மறுபரிசீலனை செய்யவும், மறுசீரமைக்கவும் விரிவான பரிந்துரைகளை குழு முன்மொழிந்தது.