தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரைத்த மாவையே அரைக்கும் பல்கலைகள்: வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற பரிந்துரை

அரைத்த மாவையே அரைக்கும் பல்கலைகள்: வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற பரிந்துரை

அரைத்த மாவையே அரைக்கும் பல்கலைகள்: வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற பரிந்துரை


UPDATED : நவ 05, 2026 05:13 PM

ADDED : நவ 05, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 05:13 PM ADDED : நவ 05, 2026 05:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்கலை செமஸ்டர் தேர்வு வினாத்தாள்களை, முந்தைய ஆண்டு வினாக்கள் இடம் பெறாத வகையில் வடிவமைக்க, உயர்கல்வித்துறைக்கு மாநில உயர்கல்வி மன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் 22 மாநில பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, அண்ணாமலை, பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை உட்பட 13 பல்கலைகள், உயர்கல்வித்துறை கீழ் இயங்கி வருகின்றன.

இப்பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் படிக்கும், இளநிலை, முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு, பல்கலையே செமஸ்டர் தேர்வுகளை நடத்துகிறது.

பொதுவாக, மாநில பல்கலை செமஸ்டர் தேர்வு வினாத்தாள்களில், முந்தைய செமஸ்டர் தேர்வு வினாக்கள் இடம் பெறும். சில நேரங்களில், பெரும்பாலான வினாக்கள், முந்தைய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்களில் இருந்தே, அதிகளவு இடம் பெற்றிருக்கும். இது, மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளில், எளிதில் தேர்ச்சி பெற வழிவகுக்கும். இது போன்ற நடவடிக்கைகள், மாணவர்களின் சிந்தனை திறனை பாதிக்கும் என, புகார்கள் எழுந்தன.

இது குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் தனியார் பல்கலை செமஸ்டர் தேர்வு வினாத்தாள்களுடன், மாநில பல்கலை வினாத்தாள்களை ஒப்பிடும் போது, மாநில பல்கலை வினாத்தாள் தரம் குறைவாக உள்ளது. கடந்த ஐந்தாண்டு வினாத்தாள்களை ஒப்பீடு செய்தால், பெரும்பாலான வினாத்தாள்கள் தொடர்ச்சியாக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுகளிலும் கேட்கப்பட்டு உள்ளன.

இது, மாணவர்கள் சிந்தித்து தேர்வு எழுதும் நிலையை கடந்து, முந்தைய செமஸ்டர் வினாத்தாள்களை படித்தால், தேர்ச்சி பெறலாம் என்ற மனப்பான்மையை உருவாக்கிறது. எனவே, மனப்பாட கல்வியை தவிர்த்து, மாணவர்கள் தேர்வில் சிந்தித்து பதிலளிக்கும் வகையில், செயல்முறை வடிவில் வினாக்கள் இடம் பெற வேண்டும் என, மாநில உயர்கல்விமன்றம் சார்பில், உயர்கல்வித்துறைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us