UPDATED : அக் 21, 2025 09:42 AM
ADDED : அக் 21, 2025 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மேலவளவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சண்முகவேல் தலைமை வகித்தார். மேலுார் தீயணைப்பு நிலைய அதிகாரி மணிவண்ணன் 'மாணவர்கள் பெரியவர்கள் துணையுடன் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க வேண்டும்' என வலியுறுத்தினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மலைச்சாமி, ஆசிரியர் அருணகிரி ஏற்பாடுகளை செய்தனர்.