தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள்


UPDATED : பிப் 11, 2026 04:48 PM

ADDED : பிப் 11, 2026 04:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 04:48 PM ADDED : பிப் 11, 2026 04:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகவியல் துறையில் கூடுதல் இடங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.

மருத்துவத்தில் இளநிலை, முதுநிலை முடித்தவர்கள், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி - எம்.பி.ஹெச்.,) சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அட்மிஷன் வேலைகள் வேகமாக நடக்கின்றன.

கோவை அரசு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் கூடுதல் இடங்களும், சிறுநீரகவியல் துறையில் புதிதாக இடங்களும் துவக்க தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு கருத்துரு அனுப்பினர். அதை மையமாக கொண்டு, கடந்த வாரங்களில் தேசிய மருத்துவ கவுன்சில் வல்லுநர்கள் அரசு மருத்துவமனையிலும், மருத்துவக் கல்லுாரி வளாகத்திலும் உரிய வசதிகள் உள்ளதா, என்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து டீன் கீதாஞ்சலியிடம் கேட்ட போது, “மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடம் உள்ளது; 3 இடம் கூடுதலாக கேட்டுள்ளோம். சிறுநீரகவியல் துறையில் புதிதாக 2 இடங்கள் கேட்டுள்ளோம். ஆய்வு செய்தவர்கள் முடிவு சொல்ல 15 நாட்களாகும். நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us