sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சோழிங்கநல்லுார் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு

/

சோழிங்கநல்லுார் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு

சோழிங்கநல்லுார் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு

சோழிங்கநல்லுார் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு


UPDATED : பிப் 11, 2026 04:49 PM

ADDED : பிப் 11, 2026 04:50 PM

Google News

UPDATED : பிப் 11, 2026 04:49 PM ADDED : பிப் 11, 2026 04:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார்:
சோழிங்கநல்லுார் அரசு மேல்நிலை பள்ளியில், 45 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் உணவு சாப்பிடும் கூடத்தை, தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் நேற்று திறந்து வைத்தார்.

ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் அரசு மேல்நிலை பள்ளியில், 1,540 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, கலையரங்கம் மற்றும் உணவு சாப்பிடும் கூடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில், 25 லட்சம் ரூபாயில், 550 சதுர அடி பரப்பு கொண்ட கலையரங்கம் மற்றும் 20 லட்சம் ரூபாயில், 1,500 சதுர அடி பரப்பில் உணவு சாப்பிடும் கூடம் கட்டப்பட்டது. இந்த இரு கட்டடங்களையும், தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் மதியழகன், கவுன்சிலர் சங்கர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us