தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை


UPDATED : செப் 23, 2026 06:12 PM

ADDED : செப் 23, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 06:12 PM ADDED : செப் 23, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை, உறுப்பு மற்றும் இணைப்புக் பட்டயப்படிப்பு கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, நேரடி மாணவர் சேர்க்கை வரும், 25ம் தேதி காலை 9 மணிக்கு கோவை வேளாண் பல்கலை அண்ணா அரங்கத்தில் நடக்கிறது.

நேரடி மாணவர் சேர்க்கையில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் கோவை வேளாண் பல்கலைக்கு நேரில் வந்து பங்கேற்கலாம். இந்த சேர்க்கையில் இடம் கிடைத்த மாணவர்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும். சேர்க்கையில் நகர்வு முறை கிடையாது.

பட்டயப்படிப்புக்கான கலந்தாய்வில் ஏற்கனவே கலந்து கொள்ளதாவர்கள், கலந்தாய்வை தவறவிட்டவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு கல்லுாரியில் சேராதவர்கள் பங்கேற்கலாம்.

பொதுக் கலந்தாய்வில் இடம் பெற்று ஏற்கனவே சேர்க்கை பெற்றவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் இடம் பெற்று, பின்னர் இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்கள் பங்கேற்க கூடாது.

கல்லுாரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. இடம் கிடைத்த பின் மாணவர்கள் எஸ்.சி., எஸ்.சி.,(ஏ), எஸ்.டி.. பிரிவினர், 100 ரூபாய் மற்றும் இதர பிரிவினர் 200 ரூபாய் செலுத்த வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

சேர்க்கையின் போது இடம் கிடைத்தவர்கள் கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்தி உடனே கல்லுாரியில் சேரலாம். இது குறித்த விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள், 94886 35077, 94864 250766 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us