UPDATED : செப் 23, 2026 06:10 PM
ADDED : செப் 23, 2026 06:12 PM
சென்னை:
'பிளிப்கார்ட்'டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 25ம் தேதி கிண்டியில் நடக்க உள்ளதாக, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை, வரும் 25ம் தேதி நடத்துகிறது. சென்னை, கிண்டி, ஆலந்துாரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 முதல் 2:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், 'பிளிப்கார்ட்ʼ நிறுவனம் பங்கேற்று, 'டெலிவரி எக்ஸிக்யூடிவ்' 'டெலிவரி அசோசியேட்' உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
பங்கேற்க கட்டணம் கிடையாது. பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
