UPDATED : பிப் 04, 2025 12:00 AM
ADDED : பிப் 04, 2025 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிப்புகள்:
பல்வேறு துறைகளில் பி.எஸ்சி., எம்.காம்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி.,-பி.எட்., எம்.பார்ம்., படிப்புகள்.
மாணவர் சேர்க்கை முறை:
மத்திய அரசு சார்பில் தேசிய தேர்வு முகமையால் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்காக தனித்தனியே நடத்தப்படும் சி.யூ.இ.டி., -2025 தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விபரங்களுக்கு:
www.curaj.ac.in/acts/admission-2025-26