அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
UPDATED : ஆக 26, 2026 06:35 PM
ADDED : ஆக 26, 2026 06:38 PM
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஊத்தங்கரை, அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன.
ஆட்டோமேஷன் ரோபோட்டிக்ஸ் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள், 2026 - 2027 கல்வியாண்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இதில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுாரிக்கு நேரடியாக வந்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது நேரடி சேர்க்கை நடந்து கொண்டுள்ளது. மிகக்குறைந்த கட்டணம், இலவச பஸ் பாஸ் மற்றும் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை மேலும் தமிழக அரசின் இன்டர்ஷிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. படிப்பு முடித்த உடன், 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.
எனவே, அனைத்து வசதிகளும் உள்ள இக்கல்லுாரியில் மாணவ, மாணவியர் சேரலாம். மேலும் விபரங்களுக்கு, 04341 -291959 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
