டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை
டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை
UPDATED : ஜூன் 26, 2026 04:29 PM
ADDED : ஜூன் 26, 2026 04:31 PM
வனவாசி:
வனவாசி அரசு பாலிடெக்னிக் முதல்வர் வரதகுரு அறிக்கை:
பாலிடெக்னிக்கில், 'டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி' பெயரில், 3 ஆண்டு பட்டயப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. படிக்கும்போதே வருமானம் ஈட்டும் வாய்ப்பு என்ற திட்டத்தில், ஓசூரில் இயங்கும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, இப்பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் ஆண்டுக்கு, 3 மாதங்கள் கல்லூரி படிப்பு, 9 மாதங்கள் டாடா நிறுவனத்தில் தொழிற்பயிற்சி மேற்கொள்வர்.
சிறப்பு அம்சமாக, பாலிடெக்னிக்கில் படிக்கும், 3 மாதங்களுக்கு தலா, 4,000 ரூபாய், 9 மாதங்கள் தொழிற்பயிற்சி காலத்தில் மாதந்தோறும், 9,000 ரூபாய் பயிற்சி ஊக்கத்தொகை வழங்கப்படும். பட்டயப்படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு முடித்து, இரு ஆண்டு ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரும், 30 வரை, www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம், 150 ரூபாயை, டெபிட், கிரெடிட் கார்டுகள், நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, விண்ணப்ப பதிவு கட்டணம் இல்லை.
