மத்திய அரசு பணியாளர் தேர்வு பயிற்சி வரும் 29க்குள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு பணியாளர் தேர்வு பயிற்சி வரும் 29க்குள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூன் 26, 2026 04:28 PM
ADDED : ஜூன் 26, 2026 04:29 PM
கரூர்:
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்கு வரும், 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் வெண்ணைமலை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வலர் பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பயிற்சி வகுப்பு நடக்கிறது.
சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வு, இணையவழி தேர்வு, முழு மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வுகளுக்கு புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வரும், 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04324 - 223555, 6383050010, 6374319939 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
