அரசு கல்லுாரியில் இன்று முதுநிலை 2ம் கட்ட சேர்க்கை
அரசு கல்லுாரியில் இன்று முதுநிலை 2ம் கட்ட சேர்க்கை
UPDATED : ஆக 30, 2024 12:00 AM
ADDED : ஆக 30, 2024 10:45 AM
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முதுநிலை மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (30ம் தேதி) நடக்கிறது.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் (40), ஆங்கில இலக்கியம் (20), பொருளியல் (20), வணிகவியல் (40), சுற்றுலாவியல் (20), கணிதவியல் (20), புள்ளியியல் (15), இயற்பியல் (30), வேதியியல் (20), கணினி அறிவியல் (40) உள்ளிட்ட முதுநிலை பாடப்பிரிவுகளில் மொத்தமாக, 265 இடங்கள் உள்ளன.
முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 19ம் தேதி நடந்தது. அதில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 191 மாணவர்கள் சேர்ந்தனர். நிரப்பப்படாத, 74 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (30ம் தேதி) நடக்கிறது. முதற்கட்ட கலந்தாய்விற்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து பங்கேற்க இயலாதவர்கள், கலந்தாய்வுக்கு வந்தும் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள், புதிதாக விண்ணப்பித்தவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
உரிய சான்றிதழ்களுடன், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை, மாணவர் சேர்க்கை நடக்கும் நாளில் கல்லுாரியில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை, கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.