UPDATED : ஆக 30, 2024 12:00 AM
ADDED : ஆக 30, 2024 10:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தமுக்கம் மைதானத்தில் செப்.6 முதல் 16 வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம், புத்தக பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் மதுரையில் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான புத்தகத் திருவிழா செப்.6 ல் துவங்கி பத்து நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடக்கின்றன.
கலெக்டர் சங்கீதா கூறியதாவது:
புத்தகத் திருவிழாவில் முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நடக்க உள்ளது என்றார்.