கால்நடை மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை; இம்மாத இறுதியில் தரவரிசை பட்டியல்
கால்நடை மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை; இம்மாத இறுதியில் தரவரிசை பட்டியல்
UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM
ADDED : ஜூலை 13, 2024 10:15 AM

நாமக்கல்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை கால்-நடை மருத்துவ அறிவியல் பட்ட படிப்பு சேர்க்கைக்கு, தரவரிசை பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என, பல்கலை துணைவேந்தர் செல்வக்குமார் கூறினார்.
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கல்லுாரி மற்றும் விடுதி நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில், கலந்து கொண்ட, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார், விழா மலரை வெளியிட்டு, சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு கால்-நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு உட்பட்ட கால்நடை மருத்துவ கல்லுாரிகளில், 660 சேர்க்கை இடங்கள் கொண்ட இள-நிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்ட படிப்புக்கு, 14,500 விண்ணப்பங்களும், 100 சேர்க்கை இடங்கள் கொண்ட பி.டெக்., புட் டெக்னாலஜி, பி.டெக்., டைரி டெக்னாலஜி, பி.டெக்., பவுல்ட்ரி டெக்னாலஜி ஆகிய பி.டெக்., தொழில் நுட்ப படிப்புக-ளுக்கு, 3,000 விண்ணப்பங்களும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்ப-டையில், ஆன்லைன் மூலம் வரப்பெற்றுள்ளன.இந்த விண்ணப்பங்கள் பல்கலையால் பரிசீலிக்கப்பட்டு, இம்-மாத இறுதியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதை தொடர்ந்து, வரும் ஆக.,ல் ஆன்லைன் வழியாக சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.