sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று தேனியில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

இன்று தேனியில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

இன்று தேனியில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM

ADDED : ஜூலை 13, 2024 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM ADDED : ஜூலை 13, 2024 10:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை :
தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பாக மாணவர்களுக்கான தினமலர் வழிகாட்டி - 2024 நிகழ்ச்சி தேனியில் பாரஸ்ட் ரோடு அன்னப்பராஜா மஹாலில் இன்று (ஜூலை 13) காலை 10:00 - 1:00 மணிக்கு நடக்கிறது.

நாளை (ஜூலை 14) சிவகாசியில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 10:00 - 1:00 மணிக்கும், மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் மதியம் 3:00 - 6:00 மணிக்கும் நடக்கிறது.

இந்தாண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்காக விண்ணப்பித்த 2 லட்சம் மாணவர்களுக்கு அவர்கள் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் 1,99,868 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு ஜூலை 22 - 23, பொது கலந்தாய்வு ஜூலை 29 - செப். 3 நடக்கிறது.

இக்கலந்தாய்வு எப்படி நடக்கும். மாணவர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் நலன் கருதி தினமலர் சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான வழிகாட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி, மதுரை, சிவகாசியில் நடக்கும் இந்நிகழ்ச்சிகளில் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் நேரடியாக விளக்கம் அளிக்கின்றனர். இந்தாண்டு எந்த படிப்புகளுக்கு மவுசு அதிகம், என்ன பாடப் பிரிவுகளுக்கு எப்படி எதிர்காலம் உள்ளது, கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் என்ன, சிறந்த கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியில், இன்ஜி., கவுன்சிலிங் நடைமுறைகள்' என்ற தலைப்பில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (டி.என்.இ.ஏ.,) செயலாளர் புருேஷாத்தமன், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் என்ற தலைப்பில் பிரபல கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசுகின்றனர்.

இந்நிகழ்ச்சியை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் காலேஜ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் இணைந்து வழங்குகின்றன. அனுமதி இலவசம். வாருங்கள் மாணவர்களே உங்கள் கலந்தாய்வு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு இது.


நிகழ்ச்சியில் பங்கேற்க

இந்த QR codeஐ ஸ்கேன் செய்து உங்களுடைய பெயர், அலைபேசி எண், முகவரியை குறிப்பிட்டு முன்பதிவு செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us