ஸ்காலர்ஸ் ஆர்க் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை துவங்கியது
ஸ்காலர்ஸ் ஆர்க் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை துவங்கியது
UPDATED : மார் 09, 2026 11:10 AM
ADDED : மார் 09, 2026 11:12 AM
திருப்பூர்:
திருப்பூர், மங்கலம் சாலை, கே.வி.ஆர். நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்காலர்ஸ் ஆர்க் சர்வதேசப் பள்ளியில், 2026 - 27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது.
லண்டன் கேம்பிரிட்ஜ் கல்வி முறையைப் பின்பற்றும் இப்பள்ளியில், ப்ரீ நர்சரி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சர்வதேசத் தரத்திலான அங்கீகரிக்கப்பட்ட கல்வி முறையின் மூலம் மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் அனுபவத்தை இப்பள்ளி வழங்கி வருகிறது.
நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், அறிவியல், கணிதம், மொழி மற்றும் கணினி ஆய்வகங்கள், நுாலகம், உள்ளரங்க மற்றும் வெளியரங்க விளையாட்டு வசதிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் அமையப் பெற்றுள்ளன.
மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் பயிற்சிகளும், தனித்திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளும் இங்கு முதன்மையாகக் கருதப்படுகின்றன.
'நாளைய தலைவர்களை உருவாக்குதல்' என்ற உயர் நோக்குடன் இப்பள்ளியில், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது. பெற்றோர்கள் நேரடியாகப் பள்ளிக்கு வருகை தந்து, வகுப்பறைகள் மற்றும் செய்முறைப் பயிற்சி வசதிகளைப் பார்வையிடலாம் எனப் பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
சேர்க்கை குறித்த கூடுதல் தகவல்களுக்கு: 87540 15922
இ-மெயில்: info@scholars-ark.in
இணையதளம்: www.scholars-ark.in
