UPDATED : செப் 03, 2026 06:26 PM
ADDED : செப் 03, 2026 06:27 PM
ஈரோடு:
ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கூட்டரங்கில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் பாட வாரியாக வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தலைமை வகித்து, 1,165 ஆசிரியை, ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறுவது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது.
மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பாடங்கள், நடப்பு கல்வியாண்டில் மாத தேர்வுகளின் மதிப்பெண்களை கொண்டு ஆய்வு செய்து, பாட வாரியாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கணக்கியல், வணிகவியல், இயற்பியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. வரும் 9 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
