முதலாமாண்டு பி.இ., / பி.டெக் வகுப்புகள் தொடக்க விழா
முதலாமாண்டு பி.இ., / பி.டெக் வகுப்புகள் தொடக்க விழா
UPDATED : செப் 03, 2026 06:25 PM
ADDED : செப் 03, 2026 06:26 PM
பெருந்துறை:
பெருந்துறை, ஈங்கூரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லுாரியில், 2026 - 27 கல்வியாண்டிற்கான முதலாமாண்டு பி.இ., / பி.டெக்., மாணவர்களுக்கான வகுப்புகள் தொட க்க விழா கல்லுாரி அரங்கில் நடந்தது.
எகிவா நிறுவனத்தின் நிறுவுநரும், சென்னை என்ரிச் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியுமான ஷீத்தால் காந்தி சிறப்பாளராக கலந்து கொண்டார்.
Kanavu.org நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான கார்த்தி ஈஸ்வரமூர்த்தி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் இணைந்து குத்துவிளக்கேற்றினர்.
டாக்டர் மோகனசுந்தரி, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் வரவேற்றார். டாக்டர் ரமேஷ்குமார், முதல்வர், கல்வியில் சிறந்து விளங்குதல், ஒழுக்கம் மற்றும் தொழில்துறை - கல்வி நிறுவனங்களுக்கிடையேயான தொடர்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
சரஸ்வதி, நிர்வாக அறங்காவலர், ஹிந்துஸ்தான் எஜூகேஷனல் இன்ஸ்டிடியூசன் தலைமை வகித்து பேசினார். டாக்டர் பிரியா, செயலாளர், ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் வாழ்த்தி பேசினார். சிறப்பாளராக ஷீத்தால் காந்தி கலந்து கொண்டார். தொடர்ந்து, மூத்த மாணவர்கள் தங்களது கல்லுாரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, புதிய மாணவர்களுக்கு சிறந்த புரிதலை வழங்கினர்.
