UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை மாவட்ட அளவில் தேர்தலை பார்வையிட வங்கிப் பணியாளர்கள், கல்லுாரி ஆசிரியர்கள் என 427 நுண்பார்வையாளர்கள் (மைக்ரோ அப்சர்வர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஓட்டுச்சாவடிகளில் சிறுபிரச்னைகளையும் கண்காணித்து, பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் கொடுப்பர். இவர்களுக்கான பயிற்சியில் தேர்தல் நடத்தை ஆலோசனை வழங்கப்பட்டது. கலெக்டர் சங்கீதா, பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ், டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் கண்ணன், தாசில்தார் ேஹமா உட்பட பலர் பங்கேற்றனர்.