UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 10:45 AM

ராசிபுரம்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டார வளமையத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான, மூன்றடுக்கு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இடை நின்ற மாணவ, மாணவியரை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை பற்றியும், குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து தொழிலாளர் உதவி ஆய்வாளர் அவர்கள் உதவியுடன் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா, வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜசேகரன், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைச்செல்வி, மல்லிகேஸ்வரி, கவிதா, சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர், பள்ளி மேலாண்மைக்குழு கணக்காளர் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்