UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 08:36 AM

கோவை :
கோவை நேரு தொழில்நுட்ப கல்லுாரியில், இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் மற்றும் கேரியர் அஷ்யூரன்ஸ் மையம் சார்பில், பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, கல்லுாரி அரங்கில் நடந்தது.
இந்நிகழ்வில், ஐ.டி., பிரிவின் கீழ் மென்பொருள் நிறுவனம், உணவு மற்றும் வேளாண்மை, உட்பட, 67 நிறுவனங்கள் பங்கேற்று நேரு தொழில்நுட்ப கல்லுாரியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுகோப்புகளை மாற்றிக்கொண்டனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள் தொழில்துறை சார்ந்த திறன் மேம்பாடு, தொழில்நுட்ப திறன் மேம்பாடு, ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்பு, இன்டன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மையமாக கொண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரு கல்விக்குழுமங்களின் தலைமை சி.இ.ஓ., கிருஷ்ணகுமார், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன், ஆசிர்வாத் ஆயுர்வேதா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ராம்குமார், கல்லுாரி முதல்வர் சிவராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.