பள்ளி மாணவ மாணவியருக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
பள்ளி மாணவ மாணவியருக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
UPDATED : ஆக 19, 2026 05:52 PM
ADDED : ஆக 19, 2026 05:53 PM
காஞ்சிபுரம்:
களியனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு, விவசாயத்தின் அருமை மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
களியனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ‛நமது உழுவியல்' அமைப்பு சார்பில், ‛விவசாயம் நோக்கி இன்றைய தலைமுறை' என்ற தலைப்பில், விவசாயத்தின் அருமை மற்றும் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், மாணவ மாணவியர் மூலம் பள்ளியில், 28 விதமான காய்கறிகள், கீரைகள், பூக்களின் விதைகளைக் கொண்டு இயற்கை காய்கறிகள் தோட்டம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, ‛நெல் முதல் உணவு வரை' விவசாயி எவ்வாறு உருவாக்குகிறார்கள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து இயற்கை விவசாயிகள் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து மாணவ மாணவியருக்கு மா, கொய்யா, சீத்தா, நெல்லி, மாதுளை, முந்திரி ஆகிய மரக்கன்றுளும், தக்காளி, வெண்டை, அவரை, கீரை வகை விதைகளும் வழங்கப்பட்டன.
