தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க கலெக்டர் அறிவுரை

பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க கலெக்டர் அறிவுரை

பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க கலெக்டர் அறிவுரை


UPDATED : ஆக 19, 2026 05:51 PM

ADDED : ஆக 19, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 05:51 PM ADDED : ஆக 19, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:
தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா சித்தேரி மலையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வகுப்பறை கட்டடங்கள், குடிநீர், மின்சாரம், கழிவறை, மாணவ, மாணவியர் தங்குமிடம், விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் துாய்மையாகவும் வைத்து கொள்ள, அலுவலர்களுக்கு கலெக்டர் சரவணன் அறிவுறுத்தினார். மேலும், மாணவ, மாணவியரிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், அவசர கால பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, விஷ முறிவு சிகிச்சைகள் மற்றும் விஷ முடிவு சிகிச்சைகளுக்கான மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து, மருத்துவ அலுவலர்களிடம் கலெக்டர் சரவணன் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us