UPDATED : அக் 22, 2026 05:42 PM
ADDED : அக் 22, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
தேனி:
வீரபாண்டி, கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 வேளாண் பிரிவு மாணவர்களுக்கு கள பயிற்சி வகுப்பு கோட்டூர் பகுதியில் நடந்தது.
கோட்டூர் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் கால்நடைகள் பராமரிப்பு, தீவனம் வழங்கல், நோய் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது.
அருகில் இருந்த வெங்காயம், கால்நடை தீவனம் சாகுபடி செய்திருந்த வயல்களில் நேரடி செயல் விளக்கம் வழங்கப்பட்டது. வேளாண் ஆசிரியர்கள் மகேந்திரன், பிரியதர்ஷினி ஆகியோர் களப்பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.
