தென்னையில் அதிக விளைச்சல் வேளாண் மாணவியர் விளக்கம்
தென்னையில் அதிக விளைச்சல் வேளாண் மாணவியர் விளக்கம்
UPDATED : ஏப் 04, 2025 12:00 AM
ADDED : ஏப் 04, 2025 09:42 AM
அன்னுார்:
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவிகள், அன்னூர் வட்டாரத்தில், கிராமப்புற பணி அனுபவ திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதில் பசூரில் விவசாயிகளுக்கு தென்னை டானிக் குறித்த செயல் விளக்கம் அளித்தனர். வேளாண் மாணவியர் பேசுகையில், தென்னை டானிக், தென்னைக்கு தேவையான சத்துக்களையும், வளர்ச்சி ஊக்கிகளையும் வழங்குகிறது.
இதை வேரில் செலுத்துவதால் அதிக எண்ணிக்கையில் தேங்காய் பிடிப்பதுடன், குரும்பை உதிர்வையும் குறைக்கிறது. ஒரு லிட்டர் தென்னை டானிக்கை, நான்கு லிட்டர் தண்ணீரில் கலந்து, 200 மில்லி வீதம், ஒரு மரத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும். இதனால் தென்னையில் விளைச்சல் அதிகரிக்கும். மேலும் தென்னையில் கிடைக்கும் விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதால், கூடுதல் வருமானம் பெறலாம் என்றனர்.

