தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ., வேலைவாய்ப்பை அழிக்காது: அண்ணாமலை பேச்சு

ஏ.ஐ., வேலைவாய்ப்பை அழிக்காது: அண்ணாமலை பேச்சு

ஏ.ஐ., வேலைவாய்ப்பை அழிக்காது: அண்ணாமலை பேச்சு


UPDATED : ஜூன் 15, 2026 10:48 AM

ADDED : ஜூன் 15, 2026 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 10:48 AM ADDED : ஜூன் 15, 2026 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு நம்மையும், நமது வேலைவாய்ப்பையும் அழிக்காது என அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் நடந்த கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

உலகத்தில் எங்கு போனாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் கால் எடுத்து வைக்க வேண்டும். கம்ப்யூட்டர் எப்படி நமது வாழ்க்கையை மாற்றியதோ, அது போல், ஏ.ஐ., மாற்றம் கொண்டுவர உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்துள்ளோம். தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை பார்க்க போகிறீர்கள். அது நிறைய பிரச்னையை கொடுக்கப் போகிறது. அதில் நீங்கள் மீண்டு வர வேண்டும். ஏ.ஐ., நமது வேலைவாய்ப்பை பறித்துவிடும் எனக் கூறுவதை நம்ப மாட்டேன்.

பிரச்னை
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பலன்களை பயன்படுத்த தெரிந்தவர்கள் தான் முன்னேறி செல்வார்கள். அதனை பயன்படுத்த தெரியாதவர்கள் முன்னேற முடியாது, எனத் தெரிவித்துள்ளார். ஏ.ஐ., நமது வேலைவாய்ப்பை பறிக்காது. ஆனால், அது தெரியாத மாணவனுக்கு பிரச்னையாக முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏ.ஐ., நமது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் நேரத்தில் பட்டம் பெற்று உள்ளீர்கள். பொறியியல் பட்டம் வந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் பிறந்தது உறுதி. இறப்பது உறுதி. இடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் மாணவர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும். பயணம் செய்ய வேண்டும். குழு அமைத்து பெரிய பிளான் போட்டு சவால்களை தீர்க்க வேண்டும்.

மைல்கல்
தற்போது பொறியாளராக பட்டம் பெற்றுள்ளீர்கள். நல்ல மனிதராக பட்டம் பெறுவதற்கு இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும். இன்று ஒரு மைல்கல்லை அடைந்துள்ளீர்கள். சின்ன சிந்தனைகளில் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம். பெரிய அளவில் சிந்திக்க வேண்டும். எப்போதும் அடக்கத்துடன் எளிமையாக இருங்கள்.

வாழ்க்கை முழுதும் கற்றுக் கொள்ளுங்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். புது ஊருக்கு சென்று, புதிய விஷயத்தை கற்றுக் கொண்டு மனதை எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள். பெற்றோர்களுக்கு எப்போது தேவை என்றால் எங்கிருந்தாலும் ஓடி வர வேண்டும். எங்களை விட நீங்கள் 10 மடங்கு சாதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us