UPDATED : ஜூன் 15, 2026 10:50 AM
ADDED : ஜூன் 15, 2026 10:52 AM
சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக, ஜவுளி தொழில் சார்ந்த சிறப்பு பயிற்சிகளை பெற, தாட்கோ அழைப்பு விடுத்துள்ளது.
'தாட்கோ' எனும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய மேம்பாட்டு கழகத்தில், பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், டிப்ளமா இன் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி எனும் ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் உள்ளிட்ட சான்றிதழ் பயிற்சி நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சியில் சேர, ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கோவையில் நான்கு மாதம் நடக்கும் இப்பயிற்சிக்கான செலவினத்தை 'தாட்கோ' ஏற்கும். பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் வாயிலாக வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்யப்படும். சேர விரும்புவோர், தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
