UPDATED : ஜூன் 06, 2025 12:00 AM
ADDED : ஜூன் 06, 2025 10:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 ராயபுரம்: 
ராயபுரத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரீனிகா, 20, தனியார் கல்லுாரியில் இளங்கலை ஊடகவியல்; மற்றொரு திருநங்கை யாஷிகா, 20 பயோ டெக்னாலஜி படித்து வருகின்றனர்.
இவர்கள் கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் திணறினர். இதற்காக, சிநேகிதி அமைப்பின் வடசென்னை அமைப்பாளரான தனபாக்கியம், ராயபுரம் ஆய்வாளர் காதர் மீரானின் உதவியை நாடினார்.
அதன்படி, 21,000 ரூபாய் கட்டணத்தை, வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் முகமது வாஜித், விஜய் ஆகியோர் வழங்கினர். அதன்படி, ராயபுரம் உதவி கமிஷனர் ராஜ்பால், ஆய்வாளர் காதர்மீரான் உள்ளிட்டோர், கல்வி உதவி தொகையை, திருநங்கையருக்கு வழங்கினர்.

