தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஜே.கே. சிறந்த கல்வியாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஏ.ஜே.கே. சிறந்த கல்வியாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஏ.ஜே.கே. சிறந்த கல்வியாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜன 15, 2026 03:56 PM

ADDED : ஜன 15, 2026 03:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 15, 2026 03:56 PM ADDED : ஜன 15, 2026 03:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: நவக்கரை, ஏ.ஜே.கே. கல்வி நிறுவனங்கள் சார்பில் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.லால் மோகன் நினைவாக, தேசிய அளவிலான 'ஏ.ஜே.கே. சிறந்த கல்வியாளர் விருது' வழங்கப்படவுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் கல்வியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்தியா முழுவதிலுமிருந்து, 'சிறந்த பள்ளி, சிறந்த முதல்வர், சிறந்த ஆசிரியர்' என்ற மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளன. விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.லால்மோகன் நினைவுகளை போற்றும் வகையில் அவரின் ஆய்வுகள், படைப்புகள், பாரம்பரியம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் மற்றும் புத்தக வெளியீடும் நடைபெறும்.

வரும் 24ம் தேதி நடக்கும் விழாவில், ஏ.ஜே.கே. கல்வி நிறுவனங்களின் செயலர் அஜீத் குமார் லால் மோகன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விருதாளர்களை சிறப்பு செய்யவுள்ளனர். விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 19. விவரங்களுக்கு, www.ajkcas.ac.in என்ற இணையதள முகவரி மற்றும் 0422 3501700, 89258 35924 என்ற எண்களில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us