UPDATED : ஜன 15, 2026 03:55 PM
ADDED : ஜன 15, 2026 03:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான, விண்வெளி வினாடி வினா போட்டியை நடத்தியது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் சுமார் 15,000 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய 200 மாணவர்களுக்கு, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்துசெயற்கைக்கோள் ஏவுதலை காணும் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஜன., 12ம் தேதி பி.எஸ்.எல்.வி, சி 62 ராக்கெட் ஏவுதலை மாணவர்கள் கண்டனர்.
மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை துாண்டும் வகையில், சக்தி பொறியியல் கல்லுாரி இந்த வினாடி வினா போட்டியை நடத்தியது.

