தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வியுடன் தனித்திறன் வளர்ப்பு, சாதனையாளர்களை உருவாக்கும் அக்ஷரம் பள்ளி

கல்வியுடன் தனித்திறன் வளர்ப்பு, சாதனையாளர்களை உருவாக்கும் அக்ஷரம் பள்ளி

கல்வியுடன் தனித்திறன் வளர்ப்பு, சாதனையாளர்களை உருவாக்கும் அக்ஷரம் பள்ளி


UPDATED : அக் 13, 2026 06:33 PM

ADDED : அக் 13, 2026 06:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:33 PM ADDED : அக் 13, 2026 06:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஒவ்வொரு மாணவரின் தனித்திறன்களைக் கண்டறிந்து, அவற்றை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் திறனை உருவாக்குவதே முழுமையான கல்வியாகும்.

இந்த நோக்கத்துடன் கல்வி, விளையாட்டு, கலை, தொழில்நுட்பம், உடல்நலத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது அக்ஷரம் சர்வதேசப் பள்ளி. மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அவற்றைப் புரிந்துகொண்டு நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் கற்றல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள், சிந்தனைத் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள், பல்வேறு கற்றல் அனுபவங்கள் மூலம் மாணவர்களின் ஆர்வம் ஊக்குவிக்கப்படுகிறது.சைதன்யா நிறுவனத்துடன் இணைந்து நீட், ஜே.இ.இ., போட்டித் தேர்வுகளுக்கும் உயர்கல்விக்கும் சிறந்த அடித்தளம் அமைத்து தரப்படுகிறது. கோவை மாவட்ட அளவில் சகோதயா போட்டிகளில் முதல் இடம், மாநில அளவில் கபடி போட்டியில் இரண்டாம் இடம், கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் உள்ளிட்ட சாதனைகளைப் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கூடைப்பந்து, சதுரங்கம், டேக்வாண்டோ, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாப்பதற்கும் பள்ளி முக்கியத்துவம் அளிக்கிறது. மாதந்தோறும் கண் பரிசோதனை, பல்வேறு உடல்நலப் பரிசோதனைகள், தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியம், கலை நிகழ்ச்சிகள், வினாடி வினா, பட்டிமன்றம், அறிவியல் செயல்பாடுகள், நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படுகிறது. “கனவுகளை விதைத்து, திறமைகளை வளர்த்து, சாதனையாளர்களை அறுவடை செய்யும் அக்ஷரம் பள்ளி” கல்வியையும் தனித்திறன் வளர்ப்பையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us