கல்விச் சேவையில் 54 ஆண்டுகள், மாணவர் வளர்ச்சியில் வித்ய விகாசினி
கல்விச் சேவையில் 54 ஆண்டுகள், மாணவர் வளர்ச்சியில் வித்ய விகாசினி
UPDATED : அக் 13, 2026 06:38 PM
ADDED : அக் 13, 2026 06:39 PM
கோவை:
நேசி கவனி கற்றுக்கொள் என்ற தாரக மந்திரத்தை தனதாக்கி, கோவை மாவட்டத்தில் 1973ம் ஆண்டில் தொடங்கப்பட்ட வித்ய விகாசினி கல்வி நிறுவனம், கல்விச் சேவையில் 54வது ஆண்டை நோக்கிப் பயணித்து வருகிறது.
எஸ்.எஸ்., ஜெயலட்சுமி அம்மையாரின் சீரிய முயற்சியால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், சி.பி.எஸ்.இ., பள்ளியாக வளர்ச்சி பெற்று, மாணவர்களின் கல்வி, முழுமையான வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது. 1990ம் ஆண்டு தொடங்கப்பட்ட வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தொடர்ந்து கல்விச் சேவையாற்றி வருகிறது.
இங்கு இளம் குழந்தைகளுக்கான மழலையர் கல்வி, அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம் குழந்தைகளுக்கான வாய்ப்புப் பள்ளி, உள்ளடக்கிய கல்வி முறை கொண்டது. கல்வி, கலை, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
இவ்வண்டு நடைபெற்ற ஜூடோ விளையாட்டுப் போட்டியில், பள்ளியின் பிளஸ் 1 மாணவி ஆதிஷா மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மழலையர் பள்ளியின் விஜயதசமி சேர்க்கை நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டுக்கான விஜயதசமி சேர்க்கை நிகழ்ச்சி, அக்டோபர் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை, பள்ளித் தாளாளர் முன்னிலையில் நடக்கிறது.
