UPDATED : ஜன 24, 2026 10:53 AM
ADDED : ஜன 24, 2026 10:55 AM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லுாரிகளுக்கு நவ. 2025ல் நடைபெற்ற இளநிலை பாடத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.600 இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் விடைத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ.550 இணைய வழி செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற்று மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நகல் பெற்ற நாளில் இருந்து 7 தினங்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என, அழகப்பா பல்கலை., பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் தேர்வாணையர் ஜோதிபாசு தெரிவித்துள்ளனர்.

