UPDATED : ஆக 17, 2024 12:00 AM
ADDED : ஆக 17, 2024 10:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
அகில இந்திய அனைத்து கிறிஸ்தவ உயர்கல்வி கூட்டமைப்பின் (ஏ.ஐ.ஏ.சி.எச்.இ.,) தலைவராக மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேர்வு செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கொடைக்கானலில் நடந்த இக்கூட்டமைப்பு கூட்டத்திற்கு ஏ.ஐ.ஏ.சி.எச்.இ., பொது செயலாளர் சேவியர் வேதம் வரவேற்றார். யுனிடெட் போர்டு கிறிஸ்தவ கல்வியின் ஆசிரிய இயக்குநர் மகேர் ஸ்பர்ஜன் துவக்கி வைத்தார்.
சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் முதல்வர் ஜோசப் ஆண்டனிசாமி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். அகில இந்திய அளவில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி சேவையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.