கோவை சிறந்த ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு
கோவை சிறந்த ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு
UPDATED : ஆக 17, 2024 12:00 AM
ADDED : ஆக 17, 2024 10:46 AM
கோவை:
கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, சுதந்திரதின விழாவில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கோவை நகர வள மைய மாணவர்களுக்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளித்தமைக்காக, ஆசிரிய பயிற்றுனர் முருகேசனுக்கும், சிறந்த கற்பித்தல் செயல்முறைக்காக, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மேரி திவ்யாவுக்கும், சிறந்த நிர்வாக திறன் செயல்பாடுகளுக்காக, மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமாருக்கும், தேன் சிட்டு, ஊஞ்சல், கனவு ஆசிரியர் இதழ்கள் பணிக்காக, பெத்தநாயக்கனுார் அரசு உயர் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலமுருகனுக்கும், பல்வேறு முகாம்களை சிறப்பாக ஒருங்கிணைத்த பணிக்காக, பெரியபுத்துார் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாச்சலத்துக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாராட்டு சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பாராட்டினார்.