அகில இந்திய பேச்சு மற்றும் காது கேட்பு திறன் பயிற்சி நிறுவனம் வைர விழா: குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு
அகில இந்திய பேச்சு மற்றும் காது கேட்பு திறன் பயிற்சி நிறுவனம் வைர விழா: குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு
UPDATED : செப் 02, 2025 12:00 AM
ADDED : செப் 02, 2025 04:56 PM

மைசூரு:
கர்நாடகாவின் மைசூருவில் உள்ள அகில இந்திய பேச்சு மற்றும் காது கேட்பு திறன் பயிற்சி நிறுவனம் தனது வைர விழாவை நேற்று (செப்.1) கொண்டாடியது. இதில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
விழாவில் கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் சித்தராமையா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல், மாநில சுகாதார அமைச்சர் குனேஷ் குண்டுராவ், மைசூர் எம்.பி. யாதுவீர் கிருஷ்ணாதத்தா சாமராஜா வடியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவில் தகவல் தொடர்பு குறைபாடுகள் தொடர்பான கல்வி, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் முக்கிய பங்களிப்பு செய்த இந்நிறுவனத்தின் வைர விழாவில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் உரையாற்றினார். மேலும், தகவல் தொடர்பு குறைபாட்டுக்கான சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதலில் பங்களித்த முன்னாள், தற்போதைய இயக்குநர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

