UPDATED : செப் 03, 2025 12:00 AM
ADDED : செப் 03, 2025 09:50 AM
திண்டுக்கல் :
திண்டுக்கல் அங்குவிலாஸ் பள்ளியில் நடந்து வரும் புத்தக திருவிழாவின் 6ம் நாள் விழாவான நேற்று காலை 11:30 மணிக்கு மாவட்ட எழுத்தாளர்களின் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
திண்டுக்கல் இலக்கியக்களம் இணை செயலாளர் ராமாநிதி, கலை இலக்கிய பெருமன்றம் மாவட்ட தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மாவட்டத்தலைவர் சிவக்குமார் பேசினர். இதில் எழுத்தாளர் சரவணக்குமார் எழுதிய 'மலர் துளிகள்' நுாலும் வெளியிடப்பட்டது.
இதன் நுாலாசிரியர் சரவணக்குமார் கூறுகையில் '2002 முதல் 2004 வரை 'தினமலர்'நாளிதழில் வெளியான எனது 'ஹைக்கூ' கவிதைகளை தொகுத்து நுால் தயாரிக்கப்பட்டுள்ளது. கவிஞனாக எனக்கு முதல் அங்கீகாரம் கொடுத்த தினமலர் நாளிதழுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக 'மலர்' என தேர்வு செய்தேன். இது எனது மனைவியின் பெயரையும் ஒத்துப்போவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்றார்.