sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் 8000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு

/

இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் 8000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு

இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் 8000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு

இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் 8000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு


UPDATED : மே 10, 2024 12:00 AM

ADDED : மே 10, 2024 12:37 PM

Google News

UPDATED : மே 10, 2024 12:00 AM ADDED : மே 10, 2024 12:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
இந்த கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 8000 மருத்துவ இடங்களை ரஷ்ய அரசு ஒதுக்கி உள்ளது.

ரஷ்யாவில் அரசு மருத்துவ பல்கலைகளில்இந்திய மாணவர்களுக்கு 5,000 ஆக இருந்த மருத்துவ இடங்களை 8,000 என அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் தற்போதைய விதிமுறைகளை கடைப்பிடிப்பதிலும், இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது என்றும் ரஷ்ய அரசு உறுதி பூண்டுள்ளது.

இது குறித்த கல்வி கண்காட்சி நாளையும், நாளை மறுநாளும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில்நடக்க உள்ளது. மே 14ல் மதுரை ரெசிடென்சி ஹோட்டல், 15ம் தேதி திருச்சி பெமினா ஹோட்டல், 16ம் தேதி சேலம் ஜி.ஆர்.டி.ஸைப் ஹோட்டல், 17ம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டல் ஆகியவற்றில் இந்த கல்வி கண்காட்சி நடக்க உள்ளது.

இந்த கண்காட்சிகளில், வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலை, இம்மானுவேல் காண்ட் பால்டிக் பெடரல் பல்கலை, கசான் மாநில மருத்துவ பல்கலை, தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலை உள்ளிட்டவை பங்கேற்க உள்ளன. இவற்றில், எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங், தொழில்நுட்ப படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையும் நடக்க உள்ளது.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 92822 21221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.







      Dinamalar
      Follow us