UPDATED : ஆக 24, 2026 04:57 PM
ADDED : ஆக 24, 2026 04:59 PM
விழுப்புரம்:
விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 1983ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை (44 ஆண்டுகள்) பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர். நிறுவனர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார்.
தலைவர் செல்வமணி, கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் கல்லுாரியை அணுகலாம். தற்போது பயிலும் மாணவர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதில், 300 முன்னாள் மாணவர்கள் தமிழகம், வெளிநாடுகளில் இருந்து வந்து பங்கேற்றனர். என்.எல்.சி., முன்னாள் பொது மேலாளர் நாராயணன், பொறியியல் கல்லுாரி முதல்வர் இந்திரா, கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஸ்ரீதர், செயலாளர் தேவராஜ், பொருளாளர் காந்திராஜ் ஆகியோர் செய்தனர். ஜூலிஸ் நன்றி கூறினார்.
