தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சைனிக் பள்ளியில் என்.சி.சி., அதிகாரி கலந்துரையாடல்

சைனிக் பள்ளியில் என்.சி.சி., அதிகாரி கலந்துரையாடல்

சைனிக் பள்ளியில் என்.சி.சி., அதிகாரி கலந்துரையாடல்


UPDATED : ஆக 24, 2026 04:59 PM

ADDED : ஆக 24, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2026 04:59 PM ADDED : ஆக 24, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
அமராவதி நகர் சைனிக் பள்ளியை, என்.சி.சி., துணைத் தலைமை இயக்குநர் பார்வையிட்டு பயிற்சி பணி வீரர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் பிராந்தியங்களுக்கான என்.சி.சி., இயக்குநரகத்தின் துணைத்தலைமை இயக்குநர் கமோடோர் நம்பியாத் சுதீப், உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளியின் என்.சி.சி., பிரிவின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

பள்ளியின் முதல்வர் கேப்டன் ராகுல் திய்யத் வரவேற்றார். என்.சி.சி. பயிற்சி பணிவீரர்களால் துணைத் தலைமை இயக்குநருக்கு, 'காவலர் மரியாதை' வழங்கப்பட்டது.

அவர் அந்த மரியாதையை ஆய்வு செய்ததுடன், என்.சி.சி. பணியாளர்கள், இணை என்.சி.சி., அதிகாரிகள் மற்றும் பயிற்சிப் பணிவீரர்களுடன் கலந்துரையாடினார்.

'இளம் பயிற்சிப் பணிவீரரின் வாழ்வில் அறநெறி, நேர்மை மற்றும் ஒழுக்கமான நடத்தை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியானது அமராவதிநகர் சைனிக் பள்ளியின் துணை முதல்வரும், என்.சி.சி., பிரிவின் அதிகாரியுமான லெப்டினன்ட் கர்னல் கவுஷக் நந்தினி வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us