அம்ரித் பாரத் 2.0 தொடக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி
அம்ரித் பாரத் 2.0 தொடக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி
UPDATED : ஜன 11, 2025 12:00 AM
ADDED : ஜன 11, 2025 11:04 AM

சென்னை:
குறைந்த வருவாய் உள்ளவர்களும் பயன்படுத்தி பயணம் செய்யும் வகையில் அம்ரித் பாரத் 2.0 தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சரும், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் வண்டியில் 12 முக்கியமான சிறப்பம்சங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பாதி அளவு தானியங்கி ரயில் பெட்டி இணைப்பான்கள், நவீன கழிப்பறைகள், புது வகையான கட்டுமானப் பொருட்கள், இருக்கை மற்றும் படுக்கை அருகே வலுவான தூண்கள், அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கும் அம்சங்கள், நவீன பிரேக் வசதிகள், வந்தே பாரத் போன்று தொடர்ச்சியான விளக்கொளி அமைப்பு, தீயை கண்டறியும் கருவி, வெளிப்புற அவசர கால விளக்குகள், செல்பேசிகளுக்கு மின்னேற்றி சாதனங்கள், செல்பேசிகளை பொருத்தி வைக்கும் பெட்டிகள் போன்றவை அம்ரித் பாரத் 2.0-ன் முக்கிய அம்சங்களாக குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், சென்னை அருகே பாயிண்ட் கருவியிலிருந்து மரை (போல்ட்) கழற்றப்பட்டதை முன்கூட்டியே கண்டறிந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், தற்போது புதிய வடிவமைப்பில் இத்தகைய மரைகள் தயாரிக்கப்பட்டு பாயிண்ட் கருவியில் பொருத்தப்படுவதாகவும், யாராலும் இதனை அகற்ற இயலாது என்றும் தெரிவித்தார்.