UPDATED : ஜன 11, 2025 12:00 AM
ADDED : ஜன 11, 2025 10:15 AM

கலையில் ஆர்வமும், திறமையும் உள்ள இந்தியா இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோருக்கான உதவித்தொகை திட்டங்களை பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன் கடந்த 40 ஆண்டுகளாக 'சார்லஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட்', செயல்படுத்தி வருகிறது.
கலை மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு துறைகளில் உயர்கல்விக்கான உதவித்தொகை:
கலைஞர்களுக்கான இந்த உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக, தகுதியானவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஓர் ஆண்டுகால முதுநிலை படிப்பை மேற்கொள்ளலாம்.
உதவித்தொகை:
இங்கிலாந்தில் தங்குமிடம், இதர செலவுகள் மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து செலவினங்களுக்கு 700 பவுண்டுகள். விசா, உள்நாட்டு போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவீனங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது இல்லை.
கலை பிரிவுகள்:
* விசுவல் ஆர்ட்ஸ்
* பர்பாமன்ஸ் ஆர்ட்ஸ் - நடனம், நாடகம், இசை, இயக்கம்
* பிலிம் - திரைக்கதை எழுதுதல் மற்றும் இயக்கம் உட்பட சினிமா சார்ந்த பணிகள்
* போட்டோகிராபி
* டிசைன்
* ஆர்ட்ஸ் ஹிஸ்ட்ரி
பாரம்பரிய பாதுகாப்பு:
* பாதுகாப்பு கட்டடக்கலை
* பாரம்பரிய தளங்களின் மேலாண்மை மற்றும் திட்டங்கள்
* மரம், கல், உலோகம், ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் புகைப்படம் போன்ற பொருட்களின் பாதுகாப்பு
* அருங்காட்சியக மேலாண்மை
* பொறியியல், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பு
தகுதிகள்:
* இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
* 28 முதல் 38 வயதுக்குள் இருக்க வேண்டும்
* கடந்த ஐந்து ஆண்டுகளில் சார்லஸ் வாலஸ் உதவித்தொகையை பெற்றவராக இருக்கக் கூடாது
* உரிய கல்வித் தகுதி அல்லது தொழில்முறை தகுதி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றவராக இருப்பது வரவேற்கத்தக்கது
தேவைப்படும் ஆவணங்கள்:
* ஆங்கில மொழிப் புலமைக்கான ஐ.இ.எல்.டி.எஸ்., சான்றிதழ்
* விண்ணப்பித்த பாடத்திட்டம் மற்றும் அவை சார்ந்த சான்றுகள்
* இங்கிலாந்தில் எதிர்பார்க்கும் கல்வி அனுபவங்கள் மற்றும் இந்திய திரும்பிய பிறகான திட்டங்கள் ஆகியவை குறித்த சுய விளக்கம்
விபரங்களுக்கு:
www.charleswallaceindiatrust.com/scholarships