தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆயுஷ் மருத்துவ படிப்பில் காலியிடம்: சேர மாணவர்களுக்கு அழைப்பு

ஆயுஷ் மருத்துவ படிப்பில் காலியிடம்: சேர மாணவர்களுக்கு அழைப்பு

ஆயுஷ் மருத்துவ படிப்பில் காலியிடம்: சேர மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : ஜன 11, 2025 12:00 AM

ADDED : ஜன 11, 2025 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2025 12:00 AM ADDED : ஜன 11, 2025 10:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
ஆயுஷ் மருத்துவத்தில் காலியாக உள்ள 239 இடங்களுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டில் 20 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 11 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டில், 167 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில், 41 இடங்கள் உள்ளன.

மொத்தம், 239 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, வரும் 13ம் தேதி வரை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இரண்டு நாள் நேரடி கவுன்சிலிங், சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.

இன்று வரை நடக்கும் மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன் நேரடியாக சென்று, ஆயுஷ் மருத்துவ இடங்களில் சேரலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us