அம்ருதா விஸ்வ வித்யாபீடம்: 475 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
அம்ருதா விஸ்வ வித்யாபீடம்: 475 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:43 AM

சென்னை:
சென்னை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் பி.டெக். 2021-25 தொகுதியின் 3-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பொறியியல் துறைகளில் 475 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநர் மற்றும் விஞ்ஞானி பத்மகுமார் தலைமை விருந்தினராகவும், எஸ்கேஎப் இந்தியா தலைமை தொழில்நுட்ப அதிகாரி சனோஜ் சோமசுந்தரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். அம்ருதா மடத்தின் பொருளாளர் சம்பூஜ்ய ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தபுரி தலைமை தாங்கினார்.
விழாவை காணொலியின் மூலம் வேந்தர் சத்குரு ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவியின் அருளுரை ஒலிபரப்பப்பட்டது. பொறியியல் பள்ளி டீன் டாக்டர் சசங்கன் ராமநாதன் வரவேற்புரையாற்றினார். பதிவாளர் டாக்டர் பி. அஜித் குமார் முன்னிலையில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
தனது உரையில், பட்டதாரிகளை ஊக்குவித்த பத்மகுமார், “பிறரை மட்டும் பின்பற்றாதீர்கள், உங்கள் சொந்த பாதையைத் தேடுங்கள். ஆர்வத்துடனும் தைரியத்துடனும் புதுமைகளை உருவாக்குங்கள்” என அறிவுறுத்தினார்.
அதேபோல், சிறப்பு விருந்தினர் சனோஜ் சோமசுந்தரன், “வெற்றி என்பது திறமைகளில் மட்டுமல்ல, ஆர்வம் மற்றும் நன்றியுணர்வின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படுகிறது. தொடர்ந்து கற்றுக்கொண்டு, பரிசோதிக்கத் தயங்க வேண்டாம்” என கூறினார்.
முதன்மை மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பட்டதாரி வகுப்பின் சார்பில் பேசிய பப்பிசெட்டி ஹர்ஷினி, “அம்ருதாவில் பெற்ற கல்வி எங்கள் வாழ்வில் உயர்ந்த இலக்குகள் மற்றும் கருணையுடன் முன்னேற நம்பிக்கையை அளித்துள்ளது” எனக் கூறினார்.

