sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டைம்ஸ் தரவரிசையில் அம்ருதா பல்கலை டாப்

/

டைம்ஸ் தரவரிசையில் அம்ருதா பல்கலை டாப்

டைம்ஸ் தரவரிசையில் அம்ருதா பல்கலை டாப்

டைம்ஸ் தரவரிசையில் அம்ருதா பல்கலை டாப்


UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM

ADDED : ஜூன் 17, 2024 10:23 AM

Google News

UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM ADDED : ஜூன் 17, 2024 10:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
உலகின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களை பட்டியலிடுவதற்கான, 2024 டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில், 125 நாடுகளில் இருந்து, 2,152 உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில், உலகின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், அம்ருதா பல்கலையும் இடம் பெற்றுள்ளது.

மேலும், இந்திய நிறுவனங்களில் அம்ருதா பல்கலை முதல் இடம் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவை, இந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தன. இதற்கான அறிவிப்பு, பாங்காக்கில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு துறை தலைவர் மனீஷாவி ரமேஷ் பங்கேற்றார். உலகப் புகழ்பெற்ற சமூகநல தலைவராக உள்ள அம்மா ஸ்ரீ மாத அம்ருதானந்தமயி தேவியின் வழிகாட்டுதலில், பல்கலையின் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியலில், அம்ருதா பல்கலை, தரமான கல்வியில் 3ம் இடம், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் 7; பாலின சமத்துவத்தில் 22, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் 62, பசுமை எரிசக்தியில் 87, தொழில், புதுமை மற்றும் கட்டமைப்பில் 87வது இடங்களை பெற்றுள்ளது.

அம்ருதா பல்கலையில் செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us